ETV Bharat / state

சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த கூடாது: டிஜிபியிடம் புகார்! - ADMK Deputy Coordinator KP Munuswamy

சென்னை: சசிகலா இனி அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

Sasikala should not use ADMK flag Ministers Complaint to DGP  Sasikala ADMK flag Issue  ADMK Minsters Complaint Against Sasikala  அதிமுக அமைச்சர்கள் சசிகலாவுக்கு எதிராக புகார்  சசிகலா அதிமுக கட்சி கொடி விவகாரம்  சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது டிஜிபியிடம் புகார்  அமைச்சர் சி.வி.சண்முகம்  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்  AIADMK leader Madhusudhanan  ADMK Deputy Coordinator KP Munuswamy  Minister CV Shanmugam
ADMK Minsters Complaint Against Sasikala
author img

By

Published : Feb 4, 2021, 9:59 PM IST

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் டிஜிபி திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அப்போது, அவருடன் அதிமுக அமைச்சர்களான ஜெயகுமார், சி.வி. சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,"அதிமுக கட்சி கொடியை இயக்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் தவிர மாற்று இடத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த கூடாது என புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பின்பு அவரது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பதை அதிமுகவினர் கண்டித்துள்ளோம். சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை. இனி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என டிஜிபியிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்,"சசிகாலா இடைக்கால பொதுச்செயலாளராகவும், தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு மேல் சசிகலா ஐ.நா. சபை செல்லலாம் அல்லது மன்னார்குடியில் கட்டபஞ்சாயத்து நடத்தலாம்" எனக் கூறினார்.

டிஜிபியிடம் புகார் அளித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் அமைச்சர்கள்

பின்னர் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறுகையில்,"கண்டவர்களையெல்லாம் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள முடியாது. சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவை சசிகலா வழிநடத்துவார்! - டிடிவி.தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.