ETV Bharat / state

ஜூன் 7ம் தேதி சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு?... அதிமுகவை மீட்க உதவுமா? - ஓபிஎஸ் சசிகலா

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண நிகழ்வில் ஜூன் 7ஆம் தேதி சசிகலா-ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்க, டிடிவி தினகரனை சந்தித்திருக்கும் நிலையில் சசிகலாவுடனான ஓபிஎஸ் சந்திப்பானது அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

admk
அதிமுக
author img

By

Published : May 29, 2023, 8:14 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை ஏற்பட்ட போது ஆரம்பத்தில் ஓபிஎஸ்-க்கும், ஈபிஎஸ்-க்கும் நடுநிலையாக நடந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்-சின் வலது கரமாக மாறினார். அதற்கு காரணம் சசிகலா என்று கூறப்பட்டது. அதிமுகவில் சசிகலாவை இணைக்க பலகட்ட முயற்சிகளை வைத்திலிங்கம் மேற்கொண்டர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

வைத்திலிங்கம் முயற்சி: ஒற்றைத் தலைமை பிரச்சனையில் ஓபிஎஸ் அணியில் பயணம் செய்த வைத்திலிங்கம், அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைக்க முயற்சி செய்தார். இதற்கு முதலில் மக்கள் மத்தியில் ஓபிஎஸ்-சின் செல்வாக்கை நிரூபிக்க நினைத்த வைத்திலிங்கம், திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை.

டிடிவி தினகரனுடன் சந்திப்பு: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின. இதனால், முதலில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் வைத்திலிங்கம். டிடிவி தினகரனின் இல்லத்துக்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவை மீட்டெடுக்க இருவரும் ஒன்றிணைவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூறினர். இதில், அதிமுகவை மீட்டெடுக்க ஓபிஎஸ் சட்ட ரீதியாகவும், டிடிவி தினகரன் அமமுக கட்சி ரீதியாகவும் போராடுவார்கள் என பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டார். ஆனால், இந்த சந்திப்பிற்கு பிறகு இரண்டு தரப்பில் இருந்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

தாமதம் ஏன்?: டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்திருக்கும் நிலையில் சசிகலாவை எப்போது சந்திக்க உள்ளார் என கேள்வி எழுந்தது. அதற்கு, சசிகலா சென்னையில் இல்லை என்றும், விரைவில் சசிகலாவையும் நேரில் சென்று சந்திப்பதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சேலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த ஓபிஎஸ், சசிகலாவிற்கு அழைப்பு விடுக்க உள்ளார் என பேசப்பட்டது. ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு ஏன் நிகழவில்லை என சசிகலா தரப்பில் விசாரிக்கும் போது, “பலமுறை ஓபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பலமுறை நேரம் கேட்டார். ஆனால், சசிகலா ஓபிஎஸ் தரப்பினருடன் கைகோர்ப்பதை கடந்து, பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முயற்சியை எடுத்துள்ளார். மறுபுறம் டிடிவி தினகரனும், சசிகலாவிற்கும் அரசியல் ரீதியாக சுமூக உறவு இல்லை. இதனால், ஓபிஎஸ்வுடனான சந்திப்பிற்கு தாமதம் ஆகிறது” என கூறப்பட்டது.

ஜூன் 7ல் சந்திப்பு?: இந்நிலையில், அடுத்தகட்ட நகர்வாக சசிகலா-ஓபிஎஸ் சந்திப்பை நிகழ்த்த வைத்திலிங்கம் முயற்சி எடுத்துள்ளார். வரும் ஜூன் 7ஆம் தேதி வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் திருமண விழாவில் சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சையில் வைத்திலிங்கத்தின் இடத்தை நிரப்ப முன்னாள் அமைச்சர் காமராஜை வைத்து பல முயற்சிகளை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டுள்ளார். இதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தனது மகன் திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்த வைத்திலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார். இங்கு ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு நிகழ இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் நிலைப்பாடு என்ன?: சசிகலாவை சந்திக்கும் ஓபிஎஸ்சின் நிலைப்பாடு குறித்து சசிகலாவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரிடம் விசாரிக்கும் போது, “தர்மயுத்தத்தால்தான் நாம் சிறை சென்றோம் என்பதையும் சசிகலா நினைத்து பார்க்கிறார். சசிகலா சிறை சென்று தண்டனை காலம் முடிந்த பின்னர் வரும் போது அவரை ஓபிஎஸ் ஆதரித்திருந்தால் இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆகியிருப்பார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதால்தான் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க டிடிவி தினகரனையும், சசிகலாவையும் சந்திக்க முடிவு எடுத்துள்ளார்.

இதை எங்கள் தரப்பினர் சுயநலமான சந்திப்பு என்றே பார்க்கிறோம். சசிகலா பார்வையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இருவரும் துரோகம் செய்தவர்கள். அதனால், அனைவரையும் ஒருங்கிணைத்தே செல்ல விரும்புகிறார். இதில், ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை சசிகலா எடுக்க மாட்டார். ஓபிஎஸ்-சுடனான சந்திப்பு சமூக ரீதியிலான சந்திப்பு என்ற விமர்சனமும் எழும் என்பது சசிகலாவிற்கும் தெரியும். திருமண நிகழ்ச்சியில் ஓபிஎஸ்-சசிகலா சந்தித்தாலும் அது மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே பார்க்கப்படும். இதை ஓபிஎஸ் தரப்பினர் பெரிய அரசியல் ஆக்கினாலும் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே சசிகலாவின் நோக்கம்” என கூறினார்.

அதிமுகவை மீட்க உதவுமா?: இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், “ஓபிஎஸ்சிற்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. சசிகலாவை ஓபிஎஸ் சந்தித்தாலும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேசு பொருளாக இருக்கும். இவர்களுக்குள் யார் தலைமை என்ற பிரச்சனையும் உள்ளது.

மூவரும் ஒன்றிணைந்தால் சமூக ரீதியிலான இணைப்பாகவே இருக்கும். இது அதிமுகவை மீட்க உதவாது. ஆனால், இவர்கள் இணைந்து தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை பாதிக்க செய்யலாம். சசிகலா, ஓபிஎஸ் சந்தித்தாலும் அதிமுகவை மீட்க வாய்ப்பு இல்லை. அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றுவிட்டது” என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.