ETV Bharat / state

சசிகலாவின் பினாமி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

சென்னை: சசிகலாவின் பினாமி தொடர்பான வழக்கின் விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt
chennai highcourt
author img

By

Published : Feb 20, 2020, 10:21 AM IST

பினாமி பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் சசிகலாவின் பினாமியான, புதுச்சேரி நகைக்கடை அதிபரின் 148 கோடி ரூபாய்யை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் சோதனை செய்த வருமான வரித்துறை அலுவலர்கள், புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட 148 கோடி ரூபாய் பணத்தை, சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக்கூறி, வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ரிசார்ட் ஒன்றை சசிகலா தரப்புக்கு விற்பனை செய்தபோது, மதிப்பு இழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்கியதாகவும், அந்த பணத்தை வருமான வரித்துறை முடக்கியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ரிசார்ட் விற்பனை தொடர்பாக, நவீன் பாலாஜியின் குடும்பத்தினருக்கும், சசிகலாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ரிசார்ட்டின் பங்குகள் சசிகலாவின் பெயருக்கோ, அவரது பிரதிநிதிகளின் பெயருக்கோ மாற்றம் செய்யப்படாததால், பங்குகளின் உண்மையான உரிமையாளரை மறைக்கும் வகையில் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த பரிவர்த்தனை தொடர்பான உண்மை ஆவணங்கள் சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 148 கோடி ரூபாய்யை முடக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன், மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை துணை ஆணையர் திலீப் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும்: 'சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்'! - எம்.எல்.ஏ. தனியரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.