ETV Bharat / state

சசிகலா, டிடிவியை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையாம் - அடித்துக் கூறுகிறார் ஜெயக்குமார்!

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Mar 3, 2021, 7:14 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்செய்ய இன்று (மார்ச் 3) கடைசிநாள் என்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, அங்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்யக்கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதைப் பார்க்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும் பார்க்க முடிகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல்போகும்.

அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில், மக்களும், கட்சித் தொண்டர்களும் செயல்படுகின்றனர். அதிமுகவை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை.

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை, இதுதான் எங்களின் நிலைப்பாடு. அதிமுக சிங்கங்களின் கூட்டம். அமமுக குள்ளநரிகளின் கூட்டம். டிடிவி தினகரன் கருத்தை மக்கள் நகைச்சுவையாகப் பார்க்கிறார்கள்.

அதிமுகவில் சசிகலாவை இணைக்குமாறு பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது 100 விழுக்காடு வதந்திதான்" என்றார்.

இதையும் படிங்க: சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவே முயற்சி செய்கிறோம் - ஜி.கே வாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.