ETV Bharat / state

இசையும் சந்தோஷ் நாராயணனும்! - இசை

திரைப்படத்தின் கதையும், கதைக்களமும், எத்தனை வித்தியாசங்களைக் கொண்டதாக இருந்தாலும் சரி, அதை தனது தனித்துவமான இசை மூலம் தூக்கிப்பிடிக்கும் சந்தோஷ் நாராயணன் தனது இசை வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை சற்று பின்நோக்கி பார்க்கலாம்.

santhosh-narayan
author img

By

Published : May 15, 2019, 11:44 AM IST

Updated : May 15, 2019, 5:11 PM IST

உலக இசையை உற்று நோக்கினால் எக்காலக்கட்டத்தில் வெளியான இசையாக இருந்தாலும் சரி, அந்தக் காலக்கட்டத்தின் மீதான மாற்றம், அதன் மீது மக்களின் மீதான தாக்கம் கண்டிப்பாக அந்த இசையில் பிரதிபலிக்கும். இவ்வாறு மக்களின் மனம் அறிந்து, அவர்களின் நாடித்துடிப்பிற்கு இணங்க நாதம் இசைத்த இசையமைப்பாளர்களை, காலம் கடந்தும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.

முப்பதுகளின் முடிவில் இசைத்துறையில் பாபநாசம் சிவன், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்க, திடீரென ஜி.ராமநாதன் மக்கள் மத்தியில் பிரபலமானார். நாற்பதுகளில் கே.வி.மகாதேவன், ஐம்பதுகளில் டி.ஆர். பாப்பா, சி.எஸ். ஜெயராமன் புகழின் உச்சத்தில் இருந்தபோது எம்.எஸ்.விஸ்வநாதன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

பின்னர் இசைத்துறையில் இளையராஜா கோலோச்சத் தொடங்கியபோது எண்பதுகளில் சங்கர் கணேஷ் உள்ளிட்டவர்கள் இருந்தபோதும் தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தனிக்காட்டு ராஜாவாகவே ‘இளையராஜா’ வலம் வந்தார். பின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் வருகை என எத்தனையோ இசையமைப்பாளர்களை தமிழ் சினிமா கண்டுள்ளது.

இளையராஜா, ரஹ்மானைத் தொடர்ந்து தற்போதைய காலக்கட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜி.வி. பிரகாஷ், ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோரின் பெயர்களுக்கு நடுவே, 'சந்தோஷ் நாராயணன்' என்ற பெயரை மக்கள் அழுத்தி உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மிகக் குறைவான படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணனை மக்கள் இசை சிம்மாசனத்தில் உட்கார வைத்ததற்கு அவரது தனித்துவமான இசைதான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.

சந்தோஷ்நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

படங்களில் தனது இசை ஆளுமையைக் காட்ட வேண்டும் என்று எண்ணாமல், மக்களுக்கு எது தேவையோ அதை தருபவராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார் சந்தோஷ் நாராயணன். இதற்கு அட்டக்கத்தி திரைப்படத்தில், அவர் இசையமைத்த ’ஆடி போனா ஆவணி', ’நடுக்கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா...’ போன்ற பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.

சூழலுக்கேற்றப் பாடலை இசையமைப்பாளரிடம் கேட்டுப்பெறும் தன்மை அவசியம் ஒரு இயக்குநரிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அந்தப் பாடல் இயல்பாக இருக்கும். இப்படி சந்தோஷ் நாராயணனிடம் மறைந்திருந்த ஆகச் சிறந்த இசைக் கலைஞனை வெளிக்கொண்டு வந்தவர்களில் இயக்குநர் ரஞ்சித்தும் குறிப்பிடத்தக்கவர்.

சந்தோஷ் நாராயணனின் இசையைக் கேட்டால், அவர் முழுக்க முழுக்க வெஸ்டர்ன் இசையால் கவரப்பட்டவர் என்பது புரியும். அப்படிப்பட்டவரை கானாவை நோக்கி அழைத்து வந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபடுத்திய பெருமையும், ரஞ்சித்தையே சேரும். இப்படி பல சோதனை முயற்சிகளை கடந்தால்தான் ஒரு இசையமைப்பாளர் மெருகேற முடியும். இப்படிப்பட்ட பரிசோதனை முயற்சிகளை புன்சிரிப்போடு ஏற்பவர் சந்தோஷ் நாராயணன்.

santhosh-narayan
ரஜினியுடன் சந்தோஷ் நாராயணன்

இப்படி முதல் படத்தில் கானாவில் கலக்கிய சந்தோஷ் நாராயணனுக்கு, அடுத்து படமான பீட்ஸா சற்று சவலாகவே அமைந்திருந்தது. த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட பீட்ஸா திரைப்படத்திலும் தனது முத்திரையை பதித்த அவர், பின்னர் ‘சூது கவ்வும்’ படத்தில் தனக்கு கைத்தேர்ந்த வெஸ்டர்ன் இசையை கையிலெடுத்து ‘மாமா டவுசர் கழண்டுச்சே' என்ற பாடலை போட்டு திரையரங்குகளில் ரசிகர்களை அலறவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் இசையமைத்த ஜிகர்தண்டா, மெட்ராஸ், கொடி, கபாலி, மெர்குரி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தன. இசைத் துறையில் சாதிப்பதற்கு குடும்பங்களின் தயவோ, பின்புலமோ தேவையில்லை அதன் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் வந்து சாதிக்கலாம் என்பதை உலகிற்கு எடுத்துரைத்த சந்தோஷ் நாராயணனின் வெற்றிப்பயணம் தொடர்வதற்கு, அவரின் பிறந்த நாளான இன்று ஈடிவி பாரத் செய்திகள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : May 15, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.