ETV Bharat / state

உருமாறிய கரோனாவிற்கும் ஒரே தடுப்பூசிதான்- சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: உருமாறிய கரோனாவிற்கும் தற்போது அனுமதி அளித்துள்ள தடுப்பூசியை பயன்படுத்தலாம் என மாநில சுகாதாரத் துறை செயர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jan 3, 2021, 5:11 PM IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் மாநில சுகதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, " தமிழ்நாடு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு எப்போதும் தயாராக உள்ளது. தடுப்பூசியை பாதுகாத்து வைத்து செலுத்துவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள்ளாக மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பு ஊசி வழங்கப்படும் ,எப்போது கிடைக்கும் என்ற தகவல் தெரியவரும். தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பூசி வழங்குவதில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக 6 லட்சம் பேர் கொண்ட பட்டியல் உள்ளது. அரசு மற்றும் தனியார் துறையில் மருத்துவர்கள்,செவிலியர்கள், லேப் டெக்னீசன் உள்ளிட்ட மருத்துவத்துறை கடை நிலை ஊழியர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும்.

இதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும், பின்னர், 50 வயதை கடந்தவர்கள் மற்றும் கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும். கரோனா தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது.

கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிகளில் 97 பேருக்கும், எம்.ஆர். சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 20 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்து நட்சத்திர விடுதிகளையும் தொடர்ந்து சோதனை செய்து கண்காணித்து வருகிறோம்.

இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் பாதிக்கப்படவரும் குணமாகி வருகிறார். உருமாறியக் கரோனாவிற்கு என தனியாக சிகிச்சை முறைகளை மத்திய அரசு வழங்கவில்லை. ஏற்கனவே பின்பற்றப்பட்டுவரும் வழிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. உருமாறிய கரோனாவிற்கு இதே தடுப்பு மருந்து பயன்படுத்த முடியும். இந்த தடுப்பூசி 2 தவணைகள் செலுத்த வேண்டிவுள்ளது.

முக கவசம், தகுந்த இடைவெளியை பயன்படுத்தினால் எந்த கரோனாவும் வராது. இந்தாண்டு மட்டும் 1.6 கோடி கரோனா தடுப்பு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி... உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.