சென்னை: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், நான்கு வகையான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம், ஆவின் ஆரஞ்சு நிற பிரீமியம் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்படி, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை உயர்ந்ததால், அதை விட சற்று விலை குறைவான பச்சை நிற பால் பாக்கெட்டை மக்கள் அதிகம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் பால் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு மூன்று லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்து, ஒரு நாளைக்கு 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆவதாக அவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேக் தயாரிப்பில் இறங்கும் "ஆவின்" - கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விற்பனை!