ETV Bharat / state

சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதன் பின்னணி என்ன?

சென்னை: தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலை திட்டமிட்டே தனியார் மயமாக்கப்படுகிறது. இதனால். 1500 ஊழயர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

salem steel company
author img

By

Published : Nov 7, 2019, 10:42 AM IST

சேலத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலை 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறையாகும். இந்திய மகா ரத்தினங்களுள் ஒன்றாகத் திகழும் இந்த நிறுவனம், செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தியே ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) என்று கூறப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தியாகும். நாட்டின் நாணயம் தயாரித்தல், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள், ரயில் பெட்டிகள், செயற்கைக்கோள்கள், அணு உலைகள் ஆகியவற்றிற்கு தேவையான ஸ்டீல்வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் உருக்காலை
சேலம் உருக்காலை

சுமார் 136 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட 32 ஆயிரம் டன் உற்பத்தி திறனுடன் தொடங்கப்பட்ட இந்த உருக்காலையின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த உருக்காலை உலகில் மூன்றாவது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகமாக இரும்பு பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா உள்ளது. அதனோடு சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்தான் மிகவும் தரமானதாகவும் உறுதியாகவும் இருக்கிறது.

இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு 10 விழுக்காடு தேவைப்பட்டாலும் அரசோ இதனை தனியார் மையத்திற்கு தாரைவார்க்க முனைப்புடன் செயல்படுகிறது. இந்த வர்த்தகம் எதிர்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் அண்மைக் காலமாக பொதுத் துறை நிகரான லாபம் ஈட்டுவில்லை என்றும் கூறப்படுகிறது.

சேலம் உருக்காலை
சேலம் உருக்காலை

குறிப்பாக சேலத்தில் இயங்கிவரும் உருக்காலையின் மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டதால், இதன் விற்பனைத் துறை முடங்கிப்போனது. இதனால், வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள் 70லிருந்து ஒன்பதாக சரிந்துள்ளது. இந்த உருக்காலையை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதனை மீறியும் சில முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

ஏவுகனைக்கு பயன்படும் இரும்பு
ஏவுகனைக்கு பயன்படும் இரும்பு

இந்நிலையில், இது தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்திவரும் சேலம் உருக்காலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "சேலம் உருக்காலை தொடங்கப்படுவதற்கு முன்புவரை இந்தியா உருக்கு இறக்குமதி செய்து வந்தது. தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது என சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கான வேலைகள் 2017- 18ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. நிறுவனத்தை முழுவதுமாக விற்பனை செய்ய மத்திய அரசு சார்பில் விற்பனை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இதற்காக உலகளாவிய டெண்டரும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசின் டெண்டர் அறிவிப்பு கவர்ச்சிகரகமாக இல்லாததால் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

வீட்டு உபயோக பொருட்கள்
வீட்டு உபயோக பொருட்கள்

இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு பிரதான காரணம் அரசின் தவறான மேலாண்மையே. 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆலை விரிவாக்கப் பணிகளில் செய்யப்பட்ட முதலீட்டால் சேலம் உருக்காலையை ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் வட்டி கட்டும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. இதனால் நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு உருக்கு இறக்குமதி செய்யப்படுவது, சேலம் உருக்காலைக்கு என தனி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படாதது, உருக்கு தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்காமல் இருப்பது ஆகியவையே தற்போதைய நிலைக்கு காரணம்" என்று அவர் தெரிவித்தார். மேலும் அவரிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்...

கேள்வி: தனியார்மயமாக்கலால் அதன் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பதில்: சேலம் உருக்கு ஆலை தொடங்கப்பட்டபோது அதன் திறன் 32 ஆயிரம் டன்னாக இருந்தது. அப்போது அந்நிறுவனத்தில் 1500 ஊழியர்களும் 300 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றிவந்தனர். தற்போது 3.6 லட்சம் டன் திறன் கொண்ட சேலம் உருக்காலையில் 900 ஊழியர்களும் 900 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றிவருகின்றனர். நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அதன் 50 விழுக்காடு ஊழியர்கள் செயில் நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியே.

கேள்வி: சேலம் உருக்காலையால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?

பதில்: உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் உருக்கு பயன்பாடு குறைவாகவே உள்ளது. மாறிவரும் காலச்சூழலால் இனிவரும் நாள்களில் உருக்கின் தேவை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதால் இந்தத் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. உருக்கு உற்பத்தித் துறையில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில் சேலம் உருக்காலையை தனியார்வசம் ஒப்படைப்பதன் மூலம் இந்தத் துறை தனியாரின் ஆதிக்கத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவற்றின் விலை, பயன்பாட்டில் அரசால் எந்தவித முடிவும் எடுக்க முடியாது. 60 ஆண்டுகளால் உருக்குத் துறையில் அனுபவம் கொண்ட செயில் நிறுவனம் இருக்கையில் உருக்குத் துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு தாரைவார்க்க அரசு தயாராகிவிட்டது (ஆதங்கத்துடன் தெரிவித்தார்).

இவரைத்தொடர்ந்து பொதுத் துறை நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்து சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமார் பேசுகையில், "அனைத்து முக்கியத் துறைகளும் பொதுத் துறை நிறுவனங்களாக இருப்பதால்தான் இந்தியப் பொருளாதாரம் சீராகவுள்ளது. பெரிய பொதுத் துறை நிறுவனங்களைத் தனித்தனியாக பிரித்து அதனை தனியாரிடம் விற்பனை செய்கின்றனர்.

சென்னை புறநகர் ரயிலில் 10 ரூபாய்க்கு தாம்பரத்திலிருந்து எழும்பூர் வந்துவிடலாம், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகளை வழங்கப்பட்டுவருகிறது. தனியார்மயமாக்கப்பட்டால் இதுபோன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிடும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படும்.

தனியார் மயமாவதை ஏற்க முடியாது

மக்களுக்குச் சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை அரசு பாதுகாக்க வேண்டும், இதன்மூலம் சமூக நீதி காக்கப்படும். தேச வளர்ச்சிக்குப் பயனளிக்கும்" என்றார்.

Intro:Body:

சென்னை:

சேலம் உருக்காலையை முழுவதுமாக தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஆனால் சேலம் உருக்காலையை வாங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் பணி தற்போது தேங்கி நிற்கிறது.

சேலத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்று நீண்ட நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சேலம் உருக்காலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசினார். "சேலம் உருக்காலை தொடங்கப்படுவதற்கு முன்பு வரை இந்தியா உருக்கை இறக்குமதி செய்து வந்தது. தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது என சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான வேலைகள் 2017- 18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. நிறுவனத்தை முழுவதுமாக விற்பனை செய்ய மத்திய அரசு சார்பில் விற்பனை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, இதற்காக உலகளாவிய டெண்டரும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசின் டெண்டர் அறிவிப்பு கவர்ச்சிகரகமாக இல்லாததால் தனியார் நிறுவனங்கள் ஆர்வம்காட்டவில்லை என்று கூறப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இன்று வெறும் எவர்சில்வர் பாத்திரங்கள் மட்டுமின்றி அரசு வெளியிடும் நாணயங்கள், ரயில்வே பேட்டிகள், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் மங்கல்யான் விண்கலம் வரை அனைத்திலும் சேலம் உருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன" என்றார்.

சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதற்கு பிரதான காரணம் அரசின் தவறான மேலாண்மை என்று பன்னீர் செல்வம் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2010-இல் நடைபெற்ற ஆலை விரிவாக்கப் பணிகளில் செய்யப்பட்ட முதலீட்டால் சேலம் உருக்காலையை ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் வட்டி கட்டும் சூழலுக்குத் தள்ளப்பட்டது, இதனால் நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு உருக்கு இறக்குமதி செய்யப்படுவது, சேலம் உருக்காலைக்கு என தனி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படாதது, உருக்கு தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்காமல் இருப்பது ஆகியவையே தற்போதைய நிலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

தனியார் மயமாக்கலால் அதன் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

சேலம் உருக்கு ஆலை தொடங்கப்பட்டபோது அதன் திறன் 32 ஆயிரம் டன்னாக இருந்தது. அப்போது அந்நிறுவனத்தில் 1500 ஊழியர்களும், 300 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றி வந்தனர். தற்போது 3.6 லட்சம் டன் திறன் கொண்ட சேலம் உருக்காலையில் 900 ஊழியர்களும், 900 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அதன் 50 சதவிகித ஊழியர்கள் செயில் நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது, மீதாமுள்ளவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியே. அப்படியென்றால் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலையோ இன்னும் மோசமடைந்துவிடும். அவர்கள் சுரண்டலுக்கு ஆளாவார்கள். சேலம் உருக்காலை தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியம் சேலத்தில் பொருளாதாரத்தில்தான் முழுவதுமாக புழங்குகிறது. தனியார் மயமாக்கப்பட்டால் இதற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்.

சேலம் உருக்காலையால் தமிழகத்திற்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

"உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் உருக்கு பயன்பாடு குறைவாகவே உள்ளது. மாறி வரும் காலச்சூழலால் இனி வரும் நாட்களில் உருக்கின் தேவை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதால் இந்த தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. உருக்கு உற்பத்தித்துறையில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில் சேலம் உருக்காலையை தனியார்வசம் ஒப்படைப்பதன் மூலம் இந்த துறை தனியாரின் ஆதிக்கத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்படும். இதனால் அவற்றின் விலை மற்றும் பயன்பாட்டில் அரசால் எந்தவித முடிவும் எடுக்க முடியாது. 60 ஆண்டுகளால் உருக்குத்துறையில் அனுபவம் கொண்ட செயில் நிறுவனம் இருக்கையில் உருக்குத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு தாரைவார்க்க அரசு தயாராகிவிட்டது" என்றார் அதங்கத்துடன்.

பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமார் பேசுகையில், "அனைத்து முக்கிய துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களாக இருப்பதால்தான் இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது. பெரிய பொதுத்துறை நிறுவனங்களைத் தனித்தனியாக பிரித்து அதனை தனியாரிடம் விற்பனை செய்கின்றனர். சென்னை புறநகர் ரயிலில் 10 ரூபாய்க்கு தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வந்துவிடலாம், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மயமாக்கப்பட்டால் இதுபோன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிடும். தனியார்கள் லாப நோக்கத்துடன் செயல்படும்.

மின்சாரம் அரசு உற்பத்தி செய்வதால்தான் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கிறது. தனியார் கைக்குப் போனல் மின்சாரத்தின் விலை அதிகரிக்கும். சாதாரண மக்களால் பயன்படுத்த முடியாது. இப்போது மின்சாரம் பயன்படுத்தி வரும் மக்கள் 20 ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைக்குச் செல்ல நேரிடும். மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு பாதுகாக்க வேண்டும், இதன்மூலம் சமூக நீதி காக்கப்படும். தேச வளர்ச்சிக்குப் பயனளிக்கும்" என்றார்.

பேட்டி : சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமார்

bite in mojo

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.