ETV Bharat / state

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில், அனைத்து சாதியினரும் படிப்படியாக அர்ச்சகர்களாக பணியமர்த்தப்படுவர்கள் என இந்து சமய மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 31, 2021, 5:07 PM IST

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - அமைச்சர் சேகர்பாபு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - அமைச்சர் சேகர்பாபு

சென்னை : சேத்துப்பட்டில் உள்ள பழமையான டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடல் அதி நவீன முறையில் செயற்கை புல்வெளி மற்றும் மின் ஒளியுடன் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி நிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இந்த திடல் ரூ. 70 லட்சம் செல்வில் நவீனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் யாரும் பதக்கம் வெல்லாதது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டுகளை விளையாட மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இடஒதுக்கீடு - ஆதரவும், எதிர்ப்பும்

மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்திருப்பது திமுக தலைவர் ஸ்டாலின் தொடர் வலியுறுத்தல் காரணமாக நடந்தது என்றும், இந்த இட ஒதுக்கீட்டை மோடி அரசு தானாக வழங்கவில்லை எனவும் கூறினார்.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பாஜகவில் கூட்டணியில் இருந்தும் எதையும் சாதிக்கவில்லை என்றும் தயாநிதி மாறன் கூறினார். மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதை திமுக வன்மையாக எதிர்க்கிறது என்றும், அதனை கட்டாயமாக அமல்படுத்த விட மாட்டோம் எனவும் கூறினார்.

அண்ணாமலை மீது குற்றச்சாட்டு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு ஆதரவானவர், மேகதாது அணை விவகாரம் குறித்து போராட்டம் அறிவித்துள்ள அண்ணாமலை, கர்நாடகா சென்று போராட்டம் நடத்த முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கர்நாடகாவில் பாஜக ஆட்சிதான் நடைபெறுவதாகவும், தமிழ் மக்கள் மீது பற்று இருந்தால் கர்நாடக அரசுடன் பேசி மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டியது தானே என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டத்தில் திமுக உறுதியாக உள்ளதாகவும், அரசு நடத்தும் பயிற்சி கூடங்களில் முறையாக பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் படிப்படியாக கோயில்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கோயில் நிலம் மீட்பு

கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த கட்சியினர் ஆக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்கள் மீட்கப்படும் என்றும் அவர் கூறினார். சுமார் 80 இடங்களில் 600 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க :மின் தடை - எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.