ETV Bharat / state

நகை வாங்குவதுபோல் நடித்து வளையல்களைத் திருடிய பெண்கள்: சிசிடிவியில் பதிவான காட்சிகள்! - saidapet jewel theft cctv footage

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து வளையல்களைத் திருடிச்சென்ற இரண்டு பெண்களின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Jewel theft  வளையல்கள் திருட்டு  நகைகள் திருட்டு  சைதாப்பேட்டை நகைக் கடைத் திருட்டு சிசிடிவி  jewel theft cctv footage  saidapet jewel theft cctv footage  saidapet jewel theft cctv footage out now
நகை வாங்குவதுபோல் நடித்து வளையல்களை திருடிய பெண்கள்
author img

By

Published : Dec 5, 2019, 10:35 PM IST

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுனில் நிகார் என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார். கடந்த 24ஆம் தேதி பெண்கள் இருவர் அவரின் நகைக்கடைக்கு நகை வாங்க வந்துள்ளனர். 'குழந்தை வளையல் வேண்டும்' என்று கேட்ட அவர்கள், நகைகளை பார்த்துவிட்டு மாடல் பிடிக்கவில்லையென்று அங்கிருந்து சென்றுவிட்டனர்.

மாத இறுதியில் நகைகளின் இருப்பு குறித்து கடையின் உரிமையாளர் கணக்கெடுத்தபோது ஒரு ஜோடி தங்க வளையல்கள் குறைவதை கவனித்துள்ளார். இதனையடுத்து நகைக்கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த இரண்டு பெண்களும் நகை வாங்குவது போல் நடித்து ஒரு ஜோடி வளையல்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

நகை வாங்குவதுபோல் நடித்து வளையல்களைத் திருடிய பெண்கள்

இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளுடன் நகைக்கடை உரிமையாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், வளையல்களைத் திருடிச்சென்ற பெண்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்: பொதுமக்கள் விரட்டிப் பிடிப்பு!

Intro:Body:நகை வாங்குவது போல் நடித்து வளையலை திருடிச் சென்ற பெண்கள் குறித்து நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுனில் நிகார் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி பெண்கள் இருவர் சுனில் நிகாரின் கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர்.

குழந்தைவளையல் வேண்டும் என்று நகைகளை பார்த்த பெண்கள் மாடல் பிடிக்கவில்லை என்று அங்கிருந்த சென்றுள்ளனர். மாத இறுதியில் நகைகளின் மதிப்பு குறித்து அழகு பார்த்த உரிமையாளர் ஒரு ஜோடி தங்க வளையல்கள் குறைவதை கவனித்துள்ளார்.

உடனடியாக சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த இரண்டு பெண்கள் நகைகள் வாங்குவது போல் நடித்து ஒரு ஜோடி வளையலை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகளுடன் நகைக்கடை உரிமையாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வளையலை திருடிய பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.