ETV Bharat / state

மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்! - மின்சார விபத்து

மழைக்காலத்தில் மின்சார விபத்து ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து காண்போம்.

மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

author img

By

Published : Oct 31, 2021, 4:13 PM IST

சென்னை: இலங்கை கடலோரப் பகுதி, அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (அக்.31) முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரை, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக்காலத்தின் போது மின்சாரக் கசிவு உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகவுள்ளது. இதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கீழே காண்போம்.

  • மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.உடைந்த சுவிட்சுகளையும், ஃப்ளெக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.
  • டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி வயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதைக் குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாகப் பராமரிக்க வேண்டும்.
  • மேலும், சுவிட்சுகள், ஃப்ளெக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி, துணி காய வைக்கும் செயலைத் தவிர்க்க வேண்டும்.
  • குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்ட வேண்டாம். மின்கம்பங்களைப் பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.
  • மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சாரக் கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் கொடுக்க வேண்டும்
  • இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.