ETV Bharat / state

'தியாகங்களைச் செய்வோர் எல்லா காலத்திலும் போற்றப்படுவார்கள்' - டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து - டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து

ஆத்மார்த்தமான அன்போடு தியாகங்களைச் செய்வோர் எல்லா காலத்திலும் போற்றப்படுவார்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்தில் வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
author img

By

Published : Jul 31, 2020, 10:58 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இறை நம்பிக்கையுடையவர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்திடுவார்கள். அவர்களின் தியாகம் உலகம் உள்ளவரை கொண்டாடப்படும் என்பதற்குச் சாட்சியாக திகழ்வது பக்ரீத் பண்டிகை.

இறைத்தூதர் இப்ராகிம் அவர்களைப் போல இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடும், ஆத்மார்த்தமான அன்போடும் தியாகங்களைச் செய்வோர் எல்லா காலத்திலும் போற்றப்படுவார்கள். ஏனெனில், தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும் வலிமையும் மற்ற எல்லாவற்றையும்விட பெரியது.

அதனை மனதில் கொண்டு இந்த நன்னாளில், 'பசித்தவர்களுக்கு உணவும் துன்பப்படுபவர்களுக்கு உதவியும் எளியவர்களிடம் கருணையும் காட்ட வேண்டும்' என்ற நபிகளின் மொழியின் படி ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம்.

எந்தச் சூழலிலும் மனித நேயம் மாறாமல் நடந்துகொள்வோம். மனித சமுதாயத்தின் மலர்ச்சிக்கும் சக மனிதர்களின் நல்வாழ்வுக்கும் அவரவர் அளவில் இயன்ற தியாகத்தையும், தர்மத்தையும் செய்து, சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட பக்ரீத் திருநாளில் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பக்ரீத் திருநாள் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.