சாணிக் காயிதம்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூப் மற்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் சாணிக் காயிதம். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து இதில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராக்கி படத்தை போன்று இதுவும் ஒரு பழிவாங்கும் திரைப்படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது.
![Keerthi suresh , Selva raagavan,சாணிக் காயிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-saani-kayitham-leaked-script-7205221_06052022162054_0605f_1651834254_1058.jpg)
இதையும் படிங்க: ஜானி டெப் மீது வன்கொடுமை வழக்கு- கோர்ட்டில் கதறி அழுத இரண்டாம் மனைவி!