ஏசு பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.
அந்த வகையில் இன்று (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புனித ஆலயங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களும், இயக்கங்களும் ஆதறவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு பரிசுகள் மற்றும் உணவுகளை அளித்து வருகின்றனர்.
![ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தும் எஸ் ஏ சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17309083_sac.jpeg)
இந்நிலையில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினார். மேலும் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கினார். இதனை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.