ETV Bharat / state

'குடிநீர் லாரி மோதி ஏற்படும் விபத்துகளுக்கு உரிய நடவடிக்கை' - அமைச்சர் வேலுமணி - Rural Transformation Project Office

சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.

rural-transformation-project-office-opened-by-minister-velumani-jeyakumar

author img

By

Published : Sep 11, 2020, 3:56 PM IST

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு ஊரக உருமாற்ற திட்ட அலுவலகத்தை கிண்டியில் உள்ள சிட்கோ வளாகத்தில் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், ''ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா வளாகத்தில் முன்பு செயல்பட்டது. தற்போது இங்கு சிறப்பு அம்சங்களுடன் மாற்றப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியிலிருந்து பெறப்படும் ரூ. 918 கோடி நிதி, ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

525 நபர்களுக்கு பணி ஆணைகள் இத்துறையில் வழங்கப்பட்டுள்ளன. வறுமை, கடன் பிரச்னையில் இருந்து மக்களை காக்க 300 கோடி ரூபாய் நிதி மூலம் தமிழ்நாட்டில் தனிநபர் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயந்து ஊர் திரும்பியவர்களுக்கு 20.47 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 64 பயனாளிகள் கரோனா தொற்று ஒழிப்பு பணியில் பயனடைந்துள்ளனர்.

மெட்ரோ வாட்டர் லாரிகள் தனியார் மூலம் இயங்கும் லாரிகள் வேகமாக இயக்கப்படுதாக குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்த போது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அதுபோல குடிநீர் வாரிய தனியார் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றனர்.

இதையும் படிங்க: ராம்குமார் மரண வழக்கு - புழல் சிறை அலுவலர்களுக்கு சம்மன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.