ETV Bharat / state

ஒரு மணி நிலவரம் - 255 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு முடிவுகள் அறிவிப்பு! - உள்ளாட்சித் தேர்தல் தற்போதைய செய்தி

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் 1 மணி நிலவரப்படி, கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் 7 ஆயிரத்து 645 பதவிகளுக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களில் 45 ஆயிரத்து 122 பதவிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

rural-body-election-news-update-till-1pm
1 மணி நிலவரப்படி 255 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு வெற்றி அறிவிப்பு!
author img

By

Published : Jan 3, 2020, 3:03 PM IST

நடைபெற்று முடிந்த 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 315 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரண்டாம் நாளான இன்றும் தொடர்கிறது. இதுவரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 255 பதவியிடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் அதிமுக 97, திமுக 129, பாஜக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ்ட் 7, தேமுதிக 2, காங்கிரஸ் 3, மற்றவை 13 என முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், அதிமுக ஆயிரத்து 362, திமுக ஆயிரத்து 675, பாஜக 52, இந்திய கம்யூனிஸ்ட் 59, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 24, தேமுதிக 88, காங்கிரஸ் 94, என்சிபி 1 மற்றவை 629 என மொத்தம் 5 ஆயிரத்து 90 இடங்களில் 3 ஆயிரத்து 985 பதவியிடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் 7 ஆயிரத்து 645 பதவிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களில் 45 ஆயிரத்து 122 பதவியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .

இதையும் படியுங்க: தேர்தல் வெற்றி: கலைஞர் அறிவாலயத்தில் குவிந்த திமுகவினர்
!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.01.20

உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை... 1 மணி நிலவரம்...

நடைபெற்று முடிந்த 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 315 வாக்குச் சாவடிகளில் எண்ணப்படும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரண்டாம் நாளான இன்றும் தொடர்கிறது. இதுவரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 255 பதவியிடங்களுக்கு வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக 97, திமுக 129, பாஜக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ்ட் 7, தேமுதிக 2, காங்கிரஸ் 3, மற்றவை 13 ( இதில் அமமுக மற்றும் நாம் தமிழர் உள்பட சுயேட்சைகள் அடங்கும் ) வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள் அதிமுக 1362, திமுக 1675, பாஜக 52, இந்திய கம்யூனிஸ்ட் 59, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 24, தேமுதிக 88, காங்கிரஸ் 94, என்.சி.பி 1 மற்றவை 629 என மொத்தம் 5090 இடங்களில் 3985 பதவியிடங்களுக்கு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

9624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் 7645 மட்டுமே வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 76746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களில் 45122 பதவியிடங்களுக்கு மட்டுமே வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது..

பேலட் வாக்கு எந்திரங்கள் இல்லாமல் வாக்குச் சீட்டுகள் முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்று மாலைக்குள் மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

tn_che_01_local_body_election_counting_continues_1pm_status_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.