சென்னையில் அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 26 , 27 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
இந்த நிலையில், அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி வளாகங்களில் நடத்தக்கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தி உள்ளது . தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் ஏற்கனவே சில பள்ளி வளாகங்களில் நடைபெற்றது விமர்சனத்தை உருவாக்கியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரி, அரசியல் சார்ந்து மதம் சார்ந்த அமைப்பினரின் நிகழ்ச்சிகளை பள்ளி வளாகங்களில் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அந்த வகையில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை தனியார் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு அனுமதி வழங்கப்படாது. மேலும் பள்ளியின் நிர்வாகத்திடம் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தெளிவுப்படுத்தி உள்ளோம். பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படாது என பள்ளி நிர்வாகமும் தெரிவித்துள்ளனர்.
எனவே பள்ளி வளாகங்கள் குறிப்பிட்ட அரசியல் மற்றும் மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு..