ETV Bharat / state

மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை: மாணவிகளின் விவரங்களைப் பெற சிறப்பு முகாம் நடத்த உத்தரவு! - மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 உதவித் தொகை

தமிழ்நாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களைச் சேகரிக்க கல்லூரிகளில் நாளை (ஜூன் 25) முதல் சிறப்பு முகாம் நடத்த உயர் கல்வித் துறை முதன்மைச்செயலர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

மாணவிகளின்
மாணவிகளின்
author img

By

Published : Jun 24, 2022, 10:40 PM IST

சென்னை: இது குறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர், பதிவாளர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "தொழில் நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு பின்வரும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவர்.

தேவையான ஆவணங்கள்: இந்தத் திட்டத்துக்கென இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மாணவிகள் ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

விவரங்கள் சம்பந்தப்பட்ட மாணவிகள், பொறுப்பாசிரியர்கள் மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும். சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவிகள் பதிந்திடும் தங்களின் செல்போன் எண்ணுக்கு "ஓடிபி' அனுப்பப்படும் என்பதால் செல்போன் தவறாமல் கொண்டு வர வேண்டும்.

ஜூன் 30க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்: இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடிந்த பிறகு இந்த விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே தங்களது செல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக மேற்கண்ட இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தினை தொழில் நுட்பக் கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோர் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவிகளின் விவரங்களும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாகப் பதிவிடப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை அரசுக்குத் தவறாமல் அனுப்ப வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.