ETV Bharat / state

ரூ.81.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு!

சென்னை: 81 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்கள், ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதை ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (அக். 28) காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.

ரூ.81.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலங்கள்: காணொளி காட்சி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர்!
முதலமைச்சர் பழனிசாமி
author img

By

Published : Oct 28, 2020, 5:19 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 28) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை மாவட்டம் அம்பத்தூர் வட்டம் கொரட்டூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே கடவு எண் 4-க்கு மாற்றாக, 21 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதையை காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.

மேலும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தருமபுரி, திருச்சி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 59 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் காரமடை பெரியபட்டி – நெகமம் சாலை (வழி) ஆமந்தக்கடவு சாலையில் வீதம்பட்டியில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் கட்டப்பட்டது.

இதுபோன்று பல்வேறு மாவட்டங்களில் 81 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்கள், ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதை ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரும், தலைமைச் செயலர் க. சண்முகம், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக், தலைமைப் பொறியாளர் எம்.கே. செல்வன், தலைமைப் பொறியாளர் ச. சுமதி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.