துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தடைந்தது. அதில் வந்த 127 பயணிகளை விமானநிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனா்.
சோதனையின்போது ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையது அலி (20),முகமதுமுஸ்தபா (33),
நாகப்பட்டினத்தைச் சோ்ந்த மன்சூா் அலிகான் (29) ஆகிய 3 போ் மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
எனவே மூன்று பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதில் அவா்களுடைய உள்ளாடை மற்றும் உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனா்.
அவைகளின் மொத்த எடை 653 கிராம். அதன் சா்வதேச மதிப்பு ரூ.34.2 லட்சம். இதையடுத்து 3 பேரையும் சுங்கத் துறையினா் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.