தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்வோர், உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
இந்நிலையில், அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கேசவன் தலைமையில், கொரட்டூர் அம்மா உணவகம் அருகே காவலர்கள் நேற்று (மார்ச்5) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரை சூரப்பட்டு அருள் நகரைச் சேர்ந்த ரங்கநாதன் (36) என்ற உப்பு விநியோகஸ்தர் ஓட்டி வந்தார். அவரிடமிருந்து எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,02,000 ரொக்கப்பணத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அம்பத்தூர் தாசில்தார் பார்வதி மூலமாக பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தைக் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் அலுவலர்கள் ரங்கநாதனிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 'எண்ணிக்கையைவிட லட்சியத்திற்குதான் முதலிடம்'