சென்னை விமானநிலைய சரக்குப் பகுதியில் எவா்சில்வா் எண்ணெய் விளக்குகள் என்ற பெயரில் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய இருந்த 5 பெரிய மரப்பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அந்த சோதனையில் மரப்பெட்டிகளில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் 1,050 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை நடத்தியதில், போலி ஆவணங்களுடன் செம்மரக்கட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. அதையடுத்து அவை பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதி/இறக்குமதி அலுவலகத்தில் விசாரணை நடத்தியதில், டெல்லியைச் சோ்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரின் வாகனத்தில் இந்தப் மரப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கேட்பாரற்று நின்ற கார் - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்