சென்னை ஆர்.கே. நகர் பகுதிக்குள்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் சாகுல் அமீது என்பவர் செல்ஃபோன் கடை நடத்திவருகிறார். இவர் நேற்று (அக்.19) வழக்கம்போல் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (அக்.20) காலை கடையை திறக்க வந்த சாகுல் அமீது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையினுள்ளே வைக்கப்பட்டிருந்த 30 செல்ஃபோன்கள், 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருப்பதை கண்டறிந்தார்.
இதேபோன்று அருகே உள்ள ஒரு செல்ஃபோன் கடையிலும் திருட முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது. பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் காவல் துறையினர் கடையை ஆய்வு செய்தனர்.
மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டு கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.