சென்னை விமானநிலைய சரக்குப்பிரிவில் வெளிநாட்டிற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் சரக்குப் பிரிவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கொரியர் மூலமாக ஆஸ்திரேலியவிற்கு செல்லவிருந்த ரிப்பன் ரோல்களுக்கு இடையில் 57 பிளாஸ்டிக் பொட்டலங்களில் ரூ.3 கோடியே 40 லட்சம். 6 கிலோ 815 கிராம் எடைகொண்ட மெதக்வலோன் எனும் போதை பொருள் சிக்கியது.
அவற்றைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், மேலும் விசாரணையில் அதை அனுப்பிய முகவரியும், பெறும் முகவரியும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்