தமிழ்நாடு நகர்ப்புற - ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்நிலைகள் புனரமைப்பு, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் - வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி - சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
2020-21ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ. 146.87 கோடி மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறை பராமரிப்பிலுள்ள கால்வாய்கள், ஊரகப்பகுதிகளிலுள்ள இதர கால்வாய்கள் என 7,706.79 கி.மீ. நீள கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
2019-20ம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் , குடிமராமத்து பணிகளுக்காக 5,000 சிறுபாசன ஏரிகள் மற்றும் 25,000 குளங்களின் கொள்ளளவினை அதிகரிக்க ரூ .1250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீர்நிலைகளில் உள்ள மதகுகள், கலங்குகள், நீராடுதுறை, சிறுகுளம், கழிமுகம், புறமதகு ஆகிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2020-21ம் நிதியாண்டில் ரூ.7, 740 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படாத பஞ்சாயத்துக்களின் பராமரிப்பிலுள்ள குளங்கள், குட்டைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாக்கவும் பராமரிப்பின்றி இருந்த நீர்நிலைகளை புனரமைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
எனவே உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை நல்ல நிலையில் பராமரித்தும் பராமரிப்பின்றி நீர்நிலைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக அவற்றை தூர்வாரி புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 8.76 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,500 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு 250க்கும் மேற்பட்ட சமுதாய கிணறுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 4, 139 லட்சம் கட்டடங்களிலும் பேரூராட்சிபகுதிகளில் 2, 175 லட்சம் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட நீர்நிலை புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்ததன் விளைவாக 2019 ம் ஆண்டு பருவமழைக்கு பின்பு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து கட்டடங்களிலும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகள் மீது 01.04.2020 முதல் 19.10.2020 வரை ரூ 277 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு பணிகளில் கவன குறைவாக இருக்க கூடாது. அலுவலர்கள் பொது மக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சிகள், வணிக நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
விதிமீறல்கள் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு, மாநில அரசு, மருத்துவ வல்லுநர் குழு தெரிவிக்கும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீறல் ரூ.277 கோடி அபராதம்! - கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீறல்
சென்னை: புதுப்பிக்கப்படாத குளங்கள், குட்டைகளை புனரமைத்து பருவமழையை வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைச்சர் எஸ். பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.