ETV Bharat / state

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிதி அறிவிப்பு! - மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரணம்

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிதி அறிவிப்பு

author img

By

Published : Jun 3, 2021, 5:55 PM IST

Updated : Jun 3, 2021, 8:35 PM IST

17:54 June 03

சென்னை: திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், "தமிழ்நாட்டிலுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் 11, 449 நபர்கள் உள்ளதாக மூன்றாம் பாலின நல வாரியத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 2, 956 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டுகளின் கீழ் ரூ.2 ஆயிரம் பண உதவி வழங்கப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 8,493 மூன்றாம் பாலினத்தவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது. 

மூன்றாம் பாலினத்தவர்கள் சாதாரண அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இன்று (ஜூன்.3) தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை!

Last Updated : Jun 3, 2021, 8:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.