தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களைப் பழமை மாறாமல் புனரமைக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கோவை கவர்னர் பங்களா, குதிரை வண்டி கோர்ட், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய இடங்கள் புனரமைக்கும் வகையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுப்பணித் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது சேலத்திலுள்ள மாவட்ட நீதிமன்ற கட்டடம், காஞ்சிபுரத்தில் நூற்றாண்டு பழமையான கட்டடத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கன்னியாகுமரியில் உள்ள பாரம்பரிய கட்டடம், கோவை குதிரைவண்டி கோர்ட் ஆகிய பழமைவாய்ந்த கட்டடங்களைப் பழமை மாறாமல் புனரமைக்க 19.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே. பிரபாகரன் பிறப்பித்தார். இதில் குதிரை வண்டி கோர்ட் ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்டுவந்ததாகவும் இந்தக் கோர்ட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் வஉசிக்கு செக்கிழுக்க தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
பட்ஜெட் 2020-21: ரியல் எஸ்டேட் வரவேற்புக்குரியதா, ஏமாற்றக்கூடியதா?