சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் பலத்த காயமடைந்தார் என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
காயமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.