ETV Bharat / state

மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு - கே.என். நேரு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு
author img

By

Published : Jan 19, 2022, 2:21 PM IST

சென்னை: ராயபுரம் மண்டலம் யானைக்கவுனி பகுதியில் நடைபெற்றுவரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (ஜனவரி 19) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய கே.என். நேரு, "கடந்த ஆட்சிக் காலத்தில் யானைகவுனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெற்றன. தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஜூலை மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்.

சென்னையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

பழைய பணிகள் விடுபட்டுள்ள பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து முடிக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசு தேதி கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

திருப்பள்ளி தெருவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

அதனைத் தொடர்ந்து, துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருப்பள்ளி தெருவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை கே.என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 3ஆவது நாளாகப் போக்குக் காட்டும் சிறுத்தை: புதிய சிசிடிவி காட்சி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.