மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் டேக்வாண்டோ கிக் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
இதற்கு முன்பாக ஹைதராபாத்தில் பத்தாயிரம் கிக் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை அம்மாணவர்கள் சந்தித்தனர்.
மேலும், அமைச்சரிடம் தாங்கள் கின்னஸ் சாதனை பெற்றமைக்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து, டேக்வாண்டோ விளையாட்டை அனைத்து பள்ளிகளிலும் கற்றுத்தர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக ஊக்குவிப்பதாகவும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின், முருகேஸ்வரி ஆகியோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;
ரேஷன் கார்டுக்கு ரூ.900 வழங்கப்படும்: சமூகநலத் துறை அறிவிப்பு!