சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மறு உடற்கூறு ஆய்வு கோரியும் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சிபிசிஐடி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று (செப்டம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர சுப்பு, ஆய்வாளர் நடராஜன் மீதான விசாரணை அறிக்கை சினிமா கதைபோல புனையப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்வு அறிக்கையைப் பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாகத் தெரியவில்லை என்றும், திட்டமிட்ட படுகொலையை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனால், ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் பிரிவுகளை மாற்ற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
உடற்கூராய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடயவியல் துறைத்தலைவரின் முன்னிலையில் செய்யப்படவில்லை என்பது தொடர்பாக கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் சங்கர சுப்பு தெரிவித்தார்.
கோவிந்தம்மாள் தாக்கல் செய்த கூடுதல் மனு நீதிபதிக்கும், சிபிசிஐடி தரப்பிற்கும் கிடைக்காததால், விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்குப்பின் முடிவு! - ரவுடி சங்கர் என்கவுண்டர்
சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது கொலை வழக்குப் பதிய வேண்டுமா? என்பது குறித்து சிபிசிஐடியானது விசாரணைக்குப் பின் முடிவெடுக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.