கரோனா தொற்று அண்மையில் குறைந்த நிலையில் பொதுமக்கள் பயமின்றி முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றைப் பின்பற்றுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாம்பரம் சுழற்சங்கம் சார்பில் சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறி அனைவரும் முகக்கவசங்களை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோர் கைகளில் கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வாகன ஓட்டிகள், பொதுமக்களிடடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க... போலியோ விழிப்புணர்வு தினம்: ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய பரப்புரை!