தோகாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகள போட்டி 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து பாராட்டிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.