சென்னை முழுவதும் பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணம் கொள்ளை போய் வந்த வண்ணம் உள்ளது. இச்சூழலில், வங்கி அலுவலர்கள் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்மிலும் பணத்தை சரிபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, பல்லாவரம், பழைய டிரங்க் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில், நேற்று (ஜுன்.23) வங்கி மேலாளர் பாலாஜி பணத்தை சரிபார்த்தபோது, அதில், இரண்டு லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் பணம் குறைந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இது குறித்து வங்கி மேலாளர் பாலாஜி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை