ETV Bharat / state

'மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டோமே'.. டிவிஆரில் சிக்கிய கொள்ளையன்

வடபழனியில் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவை திருடிச்சென்று, டிவிஆரில்(digital video recorder) பதிவான காட்சிகளால் சிக்கிக்கொண்ட கொள்ளையனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Dec 2, 2022, 5:31 PM IST

சிசிடிவியை திருட நினைத்து சிக்கிய கொள்ளையன்

சென்னை: அரும்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் காதர் (58) என்பவர், வடபழனி நெற்குன்றம் சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அதிகாலையில் கடையை திறக்க வந்த போது, டீக்கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்துள்ளன.

கடையின் கல்லாவில் இருந்த சுமார் ரூ. 3,000 ஆயிரம் பணம், சிகரெட் பாக்கெட்கள், பிஸ்கட் போன்ற பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் அளித்தப்புகாரின் பேரில் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்தபோது, அது உடைக்கப்பட்டு அதனையும் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. கொள்ளை அடித்ததற்குப்பின் அல்லது முன்னதாகவே சிசிடிவியைக் கண்டு, ’சிசிடிவி கேமராவைத் திருடிவிட்டால் நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம்’ என்ற ரீதியில் சிசிடிவி கேமராக்களை மட்டும் எடுத்துச்சென்றிருக்கலாம் என தெரிகிறது.

சிசிடிவி கேமராவை திருட நினைத்து சிக்கிய கொள்ளையன்

ஆனால், சிசிடிவியில் பதிவாகும் அனைத்தும், தனியாக டிவிஆரிலும் (digital video recorder) பதிவாகும். எனவே சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை வடபழனி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Paytm QR code வைத்து டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளர் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.