ETV Bharat / state

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai high court
author img

By

Published : Oct 22, 2019, 1:59 PM IST

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.89 கோடியே 60 லட்சம் ரூபாய் சிக்கியது.

பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

பணப்பட்டுவாடா தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி திமுக வைரக்கண்ணன், மருது கணேஷ், அருண் நடராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை கேட்டு, திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நிலுவையிலிருந்த இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப்பட்டுவாடா புகார்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் தேவை கருதி விசாரித்து, தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ப. சிதம்பரத்திற்கு ஜாமின்

Intro:Body:ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே. நகரில் 2017ஆம் ஆண்டு நடக்கவிருந்த இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அப்போது, 89 கோடியே 60 லட்ச ரூபாயை ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கொண்ட பட்டியல் அடங்கிய ஆவணங்கள் கசிந்தன.

வருமானவரித்துறை அளித்த அறிக்கையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தபட்ட சோதனையின்போது சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், விசாரானையை சிபிஐக்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி வைரக்கண்ணன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அருண் நடராஜன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணை கேட்டு திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பணப்பட்டுவாடா புகாரிகளில் எடுக்கபட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செயதார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தேவை கருதி, சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாகவும், தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.