கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல் படி சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
சென்னையில் சலூன், சிகை அலங்காரம் கடைகளைத் தவிர்த்து சிறிய கடைகளும், 50 விழுக்காடு ஊழியர்களோடு அரசு அலுவலகங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட ஆரம்பித்துள்ளன.
சென்னை புறநகரான தாம்பரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் செல்போன் பழுது பார்க்கும் கடைகள், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், செருப்பு கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆகவே, சென்னை புறநகர் பகுதிகளில் சமூகப் பரவலால் கரோனா வைரஸ் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கரோனா உறுதி