சென்னை: செனாய் நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சஞ்சய் மற்றும் நீிலேஷ் குமார் ஆகிய இருவரும் மீது பல்வேறு குற்றங்கள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளி ரோகித் கூட்டாளிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் குடிபோதையில் டிபி சத்திரம் 11வது குறுக்குத் தெருவில் பொதுமக்களிடம் பிரச்சனை செய்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர். அதை தட்டிக் கேட்க வந்த அப்பகுதி சேர்ந்த சுரேந்தர் என்பவரையும் இருவரும் சேர்ந்து கையால் தாக்கியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் டிபி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதில் சஞ்சய் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். நீலேஷ்குமார் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.
அப்போது போலீசாரிடம் பிடிபட்ட சஞ்சய், நான் யார் தெரியுமா நான் ரோகித் கூட்டாளி என் மேல் கை வைத்தால் அவ்வளவுதான் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் சஞ்சயை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது காவல் நிலையத்தில் போலீசார்வுடன் தகாத வார்த்தைகளில் பேசி பிரச்சனை செய்துள்ளார்.
பின்னர் சஞ்சயின் உறவினர்களை காவல் நிலையம் வரவழைத்து சஞ்சயை கண்டித்து நாளை மீண்டும் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என எழுதி கொடுத்துவிட்டு அனுப்பி உள்ளனர். அப்போது மீண்டும் சஞ்சய் காவல் நிலையத்துக்கு வெளியே வந்து காவலர்களை வெட்டாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பேருந்தில் மனைவியிடம் தகாத முறையில் நடந்தவரை தட்டிக்கேட்ட கணவர் - காவலர் எனக்கூறி மிரட்டிய ஆசாமி