சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நலத் துறை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கொள்கை விளக்க குறிப்பில், "RIGHTS என்ற முன்மாதிரியான திட்டம் 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
உலக வங்கி உதவியுடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நமது நாட்டில் மட்டுமல்லாது உலகிலேயே முதல் முறையாகச் செயல்படுத்த பெரும் முன்னோடித் திட்டம் ஆகும்.
அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களின் பயன்களை அனைத்து மாற்றத்திறனாளிகளும் விடுபடாமல் பெறும் பொருட்டு மாநிலத்தின் வட்டாரம், உள்பிரிவு நிலை வரை துறையின் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த இத்திட்டம் வழிவகை செய்கிறது. ஆறு ஆண்டுகளில் 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறைபாடுகளைத் தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளைப் பெருமளவில் அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு, அவர்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இழப்பீடு தொகை 2 மாதத்திற்குள் கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்