ETV Bharat / state

'ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை' - உதயகுமார் எச்சரிக்கை

சென்னை: "தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ல் திருத்தம் செய்யப்பட்டு, அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்படும்" என்று, அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

udhyakumar
author img

By

Published : Jul 17, 2019, 10:06 PM IST

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் உதயகுமார் பேசுகையில்,

"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ல் அரசாங்க நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டவுடன் அவற்றை அகற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரசு நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்பால் உண்டாகும் பிரச்னைகளை மனதில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவுசெய்து பொருத்தமான திருத்தங்களைப் பரிந்துரைக்க, ஒரு செயலர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கான திருத்தங்கள் நடப்பு ஆண்டிலேயே இயற்றப்படவுள்ளது. அந்த திருத்தச் சட்டத்தில் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. நில ஆக்கிரமிப்பு திருத்தச் சட்டத்தில் தற்போது உள்ள மேல்முறையீடு, சீராய்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு எளியதாகவும், விரைந்தும் தீர்வு காணும் வகையில் புதிய முறைகள் கொண்டுவரப்படும்" என்றார்.

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் உதயகுமார் பேசுகையில்,

"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ல் அரசாங்க நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டவுடன் அவற்றை அகற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரசு நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்பால் உண்டாகும் பிரச்னைகளை மனதில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவுசெய்து பொருத்தமான திருத்தங்களைப் பரிந்துரைக்க, ஒரு செயலர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கான திருத்தங்கள் நடப்பு ஆண்டிலேயே இயற்றப்படவுள்ளது. அந்த திருத்தச் சட்டத்தில் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. நில ஆக்கிரமிப்பு திருத்தச் சட்டத்தில் தற்போது உள்ள மேல்முறையீடு, சீராய்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு எளியதாகவும், விரைந்தும் தீர்வு காணும் வகையில் புதிய முறைகள் கொண்டுவரப்படும்" என்றார்.

Intro:
சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை

அமைச்சர் உதயக்குமார் பேரவையில் அறிவிப்பு Body:


சென்னை, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 ல் திருத்தம் செய்யப்பட்டு , அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்படும் என அமைச்சர் உதயகுமார் சட்டப்பேரவையில் அறிவித்தார்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் உதயகுமார் பேசியவதாவது, தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய ஏரிகள் மற்றும் அணைகளின் நீர் இருப்பு , நீர் வரத்து , வெளியேற்றம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யவும், நிகழ் நேர கள தரவுகளை தடையில்லாமல் பெறுவதற்கும் , செயற்கைக்கோள் குறிப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மாதிரிகள், தண்ணீர் கணக்காய்வு ஆகியவற்றின் மூலம் நீர் வள ஆதாரங்களின் நீர் இருப்பை கண்டறியவும், தினந்தோறும் உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் விநியோகத்தின் நிலவரம் குறித்த தரவுகளை பெறுவதற்கும் , நிகழ் நேர மழையளவு , செயற்கைக்கோள் தகவல்கள் அடிப்படையில் வெள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை கண்டறியவும், அவ்வாறு கண்டறியப்பட்ட அபாயத்தை களப்பணியாளர் மற்றும் மக்களுக்கு உடனடியாக தெரிவித்து வெள்ள அபாயத்தின் போது தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கும் ஏதுவாக தமிழ்நாடு நீர் ஆதார தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு குறித்த இணையதளம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு தீவிர வறட்சியால் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிறது. பருவ நிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் குறைவான மழைப்பொழிவால் இந்நிலை மேலும் தீவிரமடைகிறது. மாற்றுத் திட்டம் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் களப்பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
இடி மின்னல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், அப்போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாத நிலை உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு , திரையரங்குகள், பொது இடங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.


திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி வட்டத்தில் செருங்களத்தூர் கிராமத்தில் மரப்பூங்கா சுமார் 40000 பூர்விக வன இனங்கள் மூலிகை செடிகள் உட்பட வனத்துறையின் மூலம் அமைக்கப்படும். இந்த மரப்பூங்கா பூர்விக இனங்களின் வனப்பரப்பினை அதிகப்படுத்தவும் ஆராய்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவினை ஊக்குவிக்கவும் பயன்படும்.


தற்பொழுது இணையவழித் தரவுதளத்தில் 100 விழுக்காடு நில உரிமை கொண்டுவரப்படாத நிலை உள்ளதால் நில உரிமை குறித்த தரவுகளை மேம்படுத்த ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நில உரிமையாளர்களிடம் இருந்து இணையவழியில் விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பின்னர் நில அளவைத் தரவுத்தளம் மேம்படுத்தப்படுவதுடன் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

பின்குறிப்புப் பதிவுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கையால் வரையப்பட்ட புலப்படச்சுவாடிகளை
ஸ்கேன் செய்யவும், பாதுகாக்க சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தில் தற்போதுள்ள பணியாளர்களை கொண்டு ஒராண்டு காலத்திற்குள் முடிக்கப்படும்.

பேரிடர்களின் போது கீழே விழும் மரங்களை வெட்டி அகற்றிட மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மேலும் பேரிடர் அல்லாத காலங்களில் மாணவர்களை மரம் நடும் பணிகளில் ஈடுபடுத்தன் மூலம் மரம் வளர்ப்பினை அதிகப்படுத்தி காற்றில் உள்ள கார்பன் அளவினை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.


வலைத்தளம் வாயிலாக நிலமாற்றம் , நில உரிமை மாற்றம், குத்தகை மற்றும் நில எடுப்பு உள்ளிட்ட அனைத்து நிலங்கள் தொடர்பான நடைமுறைகளை கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 ல் அரசாங்க நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டவுடன் அவற்றை அகற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு நிலங்களில் தற்பொழுது ஏற்படும் ஆக்கிரமிப்பால் உண்டாகும் பிரச்சனைகளை மனதில் கொண்டு 114 வயதுடைய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அரசு முடிவு செய்து பொருத்தமான திருத்தங்களைப் பரிந்துரைக்க , ஒரு செயலர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கான திருத்தங்கள் நடப்பு ஆண்டிலேயே இயற்றப்பட உள்ளது. மேலும் இந்த திருத்தச்சட்டத்தில் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. மேலும் இந்த திருத்தச்சட்டத்தில் தற்பொழுது உள்ள மேல்முறையீடு, சீராய்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு எளிய மற்றும் விரைந்து தீர்வு காணும் முறையில் வழிவகை செய்யப்படும்.


2014 ம்ஆண்டு முதல் வளதள மென்பொருளை(தமிழ்நிலம்) பயன்படுத்தி இணைய வழிப்பட்டா மாறுதல் சேவை இம்மாநிலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொது சேவை மையங்கள் வாயிலாக நில உரிமையாளர்களிடம் இருந்து பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தற்பொழுது எங்கிருந்தும் இணையம் வழியாக பொது மக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தித்தரப்படும்.,

அனைத்து கிராம வரைப்படங்கள்(16721 எண்ணிக்கை) ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. எனவே (ஏ1 தாள் ஒன்றுக்கு) 200 ரூபாய் என்ற கட்டணத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைப்படங்களை பொது மக்கள் இ சேவை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, பத்திரப்பதிவிற்கு முன்னரே உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் முறை நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். இந்த நடைமுறையின் கீழ் தத்தமது நிலங்களை , சொத்துகளை விற்பனை செய்ய விரும்பும் நில உரிமையாளர்கள் வட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து தாம் விற்பனை செய்ய விரும்பும் நிலங்கள் , சொத்துகள் குறித்த புலப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற வேண்டும். வருவாய்த்துறையால் விசாரணை மேற்கொண்டு , அதன் பின்னர் நில உரிமையாளர் (விண்ணப்பதாரர்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னர் நில உரிமையாளர் , தனது நிலப்பரிவர்த்தனையை சார்பதிவகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். இதன் பின்னர் இணைய வழிப்பட்டா மாறுதல் விவரங்கள், மீண்டும் புலத்தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும்.


சமூக பாதுகாப்புத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாளது தேதியில் 29.50 லட்சம் பயனாளிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். 2019-20 நிதியாண்டில் 4,060 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் தற்பொழுது நடைமுறையில் ஒய்வூதியம், வயதானோர், மாற்றுத்திறனாளிகள் சிரமத்தினை போக்கும் வகையில் இணையவழியில் ஒரு பக்க விண்ணப்பம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் மனுதாரர்கள் தங்களது மனுகளை அருகில் உள்ள இசேவை அல்லது பொது சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனால் அவர்களின் மனுவில் நிலையினையும் எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் தெரிந்துக் கொள்ளலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தனி இணைய வழி மனு பரிசீலனை முகப்பு செயல்படுத்தப்படும். 9,633 கிராம நிருவாக அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

























Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.