பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி நசரத்பேட்டை பகுதியில் புதிதாக இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும், விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் அதிக நேரம் இரண்டு பார்களும் செயல்படுவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் அதிகரித்தன. இதையடுத்து, பூந்தமல்லி தேர்தல் அலுவலர் பிரீத்தி பார்கவி வருவாய் துறை அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் பார்களையும் பூட்டி சீல் வைத்தார்.
மேலும், விதிமுறைகள் மீறி செயல்படும் டாஸ்மாக் பார்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: கர்நாடக மக்களவை இடைத்தேர்தல்: மறைந்த அமைச்சரின் மனைவிக்கு பாஜக வாய்ப்பு!