ETV Bharat / state

வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறலாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

author img

By

Published : Aug 31, 2021, 3:52 PM IST

வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என அத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக.13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத (இ-பட்ஜெட்) பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், இன்று (ஆக.31) வருவாய் துறை, தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது துறை ரீதியான சான்றிதழ்களை பெற வழிமுறைகள் எளிமையாகப்பட வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து பேரவையில் கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் பதில்

இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், " வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். அதற்கான தெளிவுரைகள், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

சான்றிதழை சமர்ப்பிக்க இ-சேவை மையம் செல்ல தேவையில்லை. மேலும் இ-சேவை மையத்தின் மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளும் எளிமையாக்கபட்டுள்ளது.

இ- சேவை மையத்தின் மூலம் சான்றிதழ்களைப் பெற சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. கணினி வாயிலாகவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துறை சார்ந்த சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநகராட்சியில் வார்டுகள் சீரமைக்கப்படும் - அமைச்சர் கே.என். நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.