சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது அவர் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைவதாக தெரிவித்தார்.
2014-ல் இருந்து வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Live Updates: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை உடனுக்குடன்