ETV Bharat / state

ராணுவம் ஆக்கிரமித்த பொது சாலையை மீட்கக் கோரிய வழக்கு - அரசு, ராணுவம் பதிலளிக்க ஆணை! - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

நந்தம்பாக்கத்தில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது சாலையை மீட்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Retrieve
Retrieve
author img

By

Published : Jan 4, 2023, 2:22 PM IST

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் அருகே பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009ஆம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் கிராம மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால், தாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த நிலம் ராணுவத்துக்கு வழங்கப்படாத நிலையில், ராணுவ மருத்துவமனை சாலையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், பொதுமக்கள் நலன் கருதி அதை மீட்க கோரி அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் இந்த சாலையை மீட்டுத்தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அகம்பாவ சண்டைக்கு குழந்தைகளை அடகு வைப்பதா? - நீதிபதிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.