ETV Bharat / state

பணப்பலன்களை பெறமுடியாமல் தவிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநர், நடத்துநர்கள்!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்கள் நீண்ட நாள்களாக வழங்கப்படாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

chennai news  transport workers pension issue  transport retired workers pension issue
பணப்பலன்களை பெறமுடியாமல் தவிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநர், நடத்துநர்கள்
author img

By

Published : Oct 2, 2020, 6:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணிக்கொடை, தொழிலாளர் வைப்பு நிதி, விடுப்பு சம்பளம், சமூக பாதுகாப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் நலச் சங்க பொதுச்செயலாளர் கர்சன், "போக்குவரத்து கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வு பெறுபவர்களுக்கு முறையான வகையில் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டு கடந்த காலங்களில் ஓய்வூதிய நிதி வழங்கப்பட்டது.

2019 எப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. 2019-20 ஆண்டில் 6,222 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பிற பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு1,654 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். அதேபோல் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு 600 நபர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கான பலன்களும் வழங்கப்படவில்லை.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் நலச் சங்க பொதுச்செயலாளர் கர்சன் பேட்டி

தோராயமாக ஒரு தொழிலாளிக்கு 20 லட்ச ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. மேலும், பணியில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நீண்ட நாள்களாக நிதி உதவி வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று காலத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளாம். இருப்பினும் அலுவலர்கள் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை.

போக்குவரத்து கழகங்களிடம் நிதியில்லை என அரசு கூறுகிறது. போக்குவரத்து கழகங்கள் தொழிலாளிகளிடம் இருந்து பிடிக்கும் பணத்தை வருங்கால வைப்பு நிதி பெட்டகத்தில் வைத்திருக்க வேண்டும். தொழிலாளிகளின் பணத்தை வைத்து டீசல் வாங்குவது, உதிரிபாகங்கள் வாங்குவது, அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்துவது போன்ற முறைகேடுகள் நடைபெற்று உள்ளன.

போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் இது லாபகரமாக நடத்தப்படும் தொழில் கிடையாது. மக்களுக்காக நடத்தப்படும் பொதுத்துறை சேவை. மக்கள் குறைவாக உள்ள பகுதிகளிலும் பிற தனியார் பேருந்துகள் இயக்காத லாபமற்ற பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. மின்துறை நஷ்டத்தை அரசே ஏற்பது போல இதனையும் ஏற்க வேண்டும்" என்றார்.

மாநகர போக்குவரத்து கழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நடத்துநர் சேகர் இதுவரை தனக்கு எந்தவித பணபலங்களும் கிடைக்கவில்லை” என்றார்.

இதே போல் பலரும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் கடன்களை திரும்ப செலுத்துவது, தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரை தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம் புகட்டுவர் - உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.