ETV Bharat / state

சென்னை: சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு! - crime

சென்னை: ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மனைவியின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் பறித்து தப்பிக்க முயன்றதில், ஒருவர் பிடிபட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

chain-snatched-chennai
author img

By

Published : Apr 15, 2019, 6:17 PM IST

சென்னை ராயப்பேட்டை கங்கைஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி காந்தன் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு இரு மகள்கள். நேற்றிரவு (ஏப்ரல் 14) நான்கு பேரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கினர். பிறகு ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பிரபு நகலகம் எதிரில் நடந்து வந்தபோது பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் பகவதியின் கழுத்திலிருந்த இரண்டரை சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடினர்.

சாலையில் நடந்த பெண்ணிடம் 3பவுன் செயின் பறிப்பு
அப்போது ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி காந்தன் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த ஒருவனை பிடித்து கீழே தள்ளினார். அதில் அந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மற்ற இரண்டு பேரும் நகையுடன் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட நபரை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர், மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிந்தது. அந்த நபர்
படுகாயத்துடன் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தப்பியோடிய இரண்டு பேரையும் மயிலாப்பூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை கங்கைஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி காந்தன். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு இரு மகள்கள்.  நேற்றிரவு 4 பேரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கினர். பிறகு ராயபேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பிரபு நகலகம் எதிரில் நடந்து வந்த போது பின்னால் பைக்கில் வந்த 3 பேர் பகவதியின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகையை பறித்து கொண்டு ஓடினர்.

அப்போது ஓய்வு பெற்ற எஸ்ஐ லட்சுமி காந்தன் பைக்கில் பின்னால் இருந்த ஒருவனை பிடித்து கீழே தள்ளினார். மற்ற 2 பேரும் நகையுடன் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபரை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த
பூபாலன் என்பது தெரிந்தது. பைக்கில் இருந்து இழுத்து கீழே தள்ளிய போது பூபாலனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

படுகாயத்துடன் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய 2 பேரையும் மயிலாப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.