ETV Bharat / state

"ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள்" - அண்ணாமலை முன்னிலையில் சர்ச்சை பேச்சு - சுடுவதிலும் கெட்டிக்காரர்கள்

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள் என்று பாஜக நடத்திய போராட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜக கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

author img

By

Published : Feb 21, 2023, 4:48 PM IST

Updated : Feb 21, 2023, 6:49 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக நீதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் பாஜக சார்பில் இன்று (பிப். 21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகியும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன், "ராணுவ வீரர்களை சீண்டினால் தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்லதல்ல. ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு பரீட்சை வைத்து பார்க்க வேண்டாம். எங்களை (ராணுவ வீரர்களை) சீண்டினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும்.

இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டை இடுவதில் கெட்டிக்காரர்கள், இதை எல்லாம் தமிழகத்தில் எங்களை செய்ய வைத்துவிடாதீர்கள்" என்று தெரிவித்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் - மாநிலக் கல்விக்குழு

Last Updated : Feb 21, 2023, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.