ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி - பாஜக பிரமுகர்

சென்னை: வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஏற்கனவே பாஜக பிரமுகரும், காவல் ஆய்வாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில அரசியல் பிரமுகர்களும், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, மருத்துவர் ஒருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

bjp
bjp
author img

By

Published : Nov 30, 2020, 6:40 AM IST

சென்னையை அடுத்த கோவளத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது வீட்டு வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறிய சிறுமியின் உறவு பெண், மிரட்டிபாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் சகிதாபானு அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் மற்றும் இடைத்தரகர்கள் என 12 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

இடைத்தரகர்கள் மூலம் வண்ணராப்பேட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் சிறுமியை தனது அலுவலகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய, அவரது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி என்பவரையும் வரவழைத்து இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி பாஜக பிரமுகரும், காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சில அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஒருவரும், மருத்துவர் ஒருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்த தகவல் கிடைத்துள்ளது. இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதிகள், ரிசார்ட்டுகள் என பல இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பட்டியலில் இருக்கும் முக்கிய நபர்கள் குறித்து ஐந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனரோ அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளதால், பட்டியலில் உள்ள நபர்கள் மீதான கைது நடவடிக்கை அடுத்தடுத்து நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.