சென்னை, குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கல்லூரி உதவி ஆசிரியர் ராமமூர்த்தி (வயது 68). இவர் சில நாள்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
மேலும், தனக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (நவ.06) தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டின் பின்புறமுள்ள 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து ராமமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
கணவரைக் காணவில்லை என அவரது மனைவி வெகு நேரமாகத் தேடிவந்த நிலையில், கிண்ற்றில் அவர் உயிரிழந்து கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டு கதறியுள்ளார். தொடர்ந்து அவரது குரல்கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், கிணற்றில் மிதந்த ராமமூர்த்தியின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லப்பாக்கம் காவல் துறையினர், ராமமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!