தமிழ்நாட்டில் இன்று(ஜூலை.9) ஒரே நாளில் 4,231 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இத்தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஒரு தெருவில் ஐந்து பேருக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அந்த தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது 283 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது.
இதுதொடர்பாக மண்டல வாரியான பட்டியல் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தண்டையார்பேட்டையில் - 50
திருவிக நகரில் - 10
அம்பத்தூர் - 10
அண்ணாநகர் - 52
தேனாம்பேட்டை - 8
கோடம்பாக்கம் - 124
வளசரவாக்கம் - 13
ஆலந்தூர் - 5
அடையாறு - 9
சோளிங்கநல்லூர் - 2
இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 14 நாட்கள் தொடர்ந்து நோய்த்தொற்று இல்லையென்றால் கட்டுப்படுத்தப்பட்டு பகுதியில் இருந்து விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.